கரோனா பூட்டுதல் (லாக்டவுன்) நடவடிக்கை காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பெரும் முடக்கத்தில் உள்ளன. ஏற்கனவே நாட்டில் நிலவிவந்த பொருளாதார மந்தநிலை தாக்கத்திலிருந்து மீள்வதற்குள், தற்போதைய நெருக்கடி கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
மந்தநிலை காரணமாக தேவையில் சுணக்கம் ஏற்பட்டு தொழில் துறையினர் முதலீடுகளை சுருக்கிக்கொண்டனர். இதன் காரணமாக மின்சாரத் தேவை குறைந்து பெரும்பாலான மின் உற்பத்தி நிறுவனங்கள் தனது உற்பத்தித் திறனை குறைத்துக்கொண்டன.
நிதி நெருக்கடியில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிலிருந்து மீள்வதற்காக சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு மின் உற்பத்தித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரித்து முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் என சிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள யூனியன் பிரதேசங்களின் மின் பகிர்மானம் அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதாக அண்மையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: மத்திய அரசின் பொருளாதார அறிவிப்புகள் பயன் தராது: சுபாஷ் சந்திரா