கரோனா பாதிப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அசாதாரண நிலைமையைச் சமாளிக்கும்விதமாக 1.7 லட்சம் கோடி ரூபாய் அவசர நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
அதன் தொடர் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். அதன்படி
- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகைக்கான ரெப்போ வட்டி 5.51 விழுக்காட்டிலிருந்து 4.4 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- வங்கியில் கடன் வாங்கிய நிறுவனங்களுக்கு இஎம்ஐ கட்டுவதிலிருந்து மூன்று மாதங்களுக்கு விலக்கு, தனிநபர் இஎம்ஐ-க்கு மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க வங்கிகள் பரிசீலிக்க வேண்டும்.
- நாட்டில் பணப்புழக்கம் தட்டுப்பாட்டை போக்கும்விதமாகப் புழக்கத்தை அதிகரிக்க 3 லட்சம் கோடி ரூபாய் சந்தையில் செலுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை.
- உலகளவிலும் இந்திய அளவிலும் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலைக் கூர்ந்து கண்காணித்துவருகிறோம், உலகின் பெரும்பாலான பகுதிகள் பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளன.
- தொடர்ச்சியாக அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து தேவைக்கேற்ப முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: அவசர நிதி ரூ.1.7 லட்சம் கோடி: 80 கோடி ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம்