மும்பை: இணைய வசதி இல்லாதவர்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி பைலட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடன் அல்லது பற்று அட்டையை (டெபிட் / கிரெடிட் கார்ட்) பயன்படுத்தி பல முறை பணம் செலுத்த முயற்சிக்கும்போது, அது தடைபட்டு போவதற்கான சாத்தியக்கூறுகளை ரிசர்வ் வங்கி ஆராய்ந்தது. இது எந்த காரணத்திற்காகவும் இருக்கலாம் என்று அறியும் வகையில் மேற்கொண்ட ஆய்வில் இணைய இணைப்பு சரிவர இல்லாதது என்பது தெரியவந்தது.
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 90% வரை நகைக்கடன்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
பரிவர்த்தனை தளத்துடன் இணையம் இல்லாமல் இணைப்பை ஏற்படுத்த முடியாத நிலை சில இடங்களில் உள்ளது. இதனை சரிசெய்யும் வகையில் இணையம் இல்லாமல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி பைலட் திட்டம் எனும் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்களின் ஆர்வம், பொறுப்பு பாதுகாப்பு போன்றவற்றைப் பாதுகாப்பதற்கான உள்ளமைக்கப்பட்ட அம்சங்களுடன் இணைய வசதி இல்லாமல் சிறிய மதிப்புடைய தொகையை பைலட் திட்டத்தின் மூலம் செலுத்த முடியும். இந்த பைலட் திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைமை ஆபரேட்டர்கள் (பிஎஸ்ஓக்கள்), கைபேசி ஆகியவற்றின் மூலம் இதற்கான தீர்வுகளை பெற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வருகிறது வாட்ஸ்அப் பே: ஜியோவுடன் சேர்ந்து போட்டி நிறுவனங்களை துவம்சம் செய்ய திட்டம்!
மேலும், பைலட் திட்டம் மார்ச் 31, 2021 வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கைபேசிகள், கடன் / பற்று அட்டைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கணிசமான வளர்ச்சியை கண்டாலும், இணைய வசதி இல்லாமை அல்லது இணையத்தின் குறைந்த வேகம், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில், இது ஒரு பெரிய தடையாக இருப்பதை ரிசர்வ் வங்கி கவனத்தில்கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது.