ETV Bharat / business

பாஜகவால் வீழ்ந்த பார்லே - ஜி ராஜ்ஜியம்! - britannia

உலகளவில் பிரபலமான பார்லே - ஜி பிஸ்கட் நிறுவனம் தனது தயாரிப்பின் ஒருபகுதியை நிறுத்த முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம் 10 ஆயிரம் ஊழியர்கள் பணியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

parle - g
author img

By

Published : Aug 22, 2019, 10:28 AM IST

பார்லே - ஜி பிஸ்கட் இந்தியாவில் மிகவும் பிரபலமான பிஸ்கட் ஆகும். 90களில் பிறந்தவர்கள் இந்த பிஸ்கட்டை சாப்பிடாமல் இருந்திருக்க முடியாது. இந்த பிஸ்கட்டுக்கும் 90களில் பிறந்தவர்களுக்கும் உணர்வுப்பூர்வமான தொடர்பு ஒன்று உண்டு. 'சக்திமான்' நாடகம் மிகவும் பிரபலமான காலகட்டம் அது, பார்லே - ஜி பிஸ்கட் அந்த நாடகத்தின் மூலம் தங்கள் நிறுவனத்தை ப்ரமோட் செய்துகொண்டது.

பார்லே - ஜி பிஸ்கட் ஒன்று வாங்கினால் சக்திமான் ஸ்டிக்கர் இலவசமாக கிடைக்கும். இதற்காகவே சிறுவர்கள் எல்லாம் அடம்பிடித்து அந்த பிஸ்கட்டை வாங்கினார்கள். ஒரு பாக்கெட்டின் விலை 3 ரூபாய் என்பதால், இந்த பிஸ்கட் அடித்தட்டு மக்களையும் சென்றடைந்தது. சக்திமான் ஸ்டிக்கர் இல்லாத பீரோ, கதவுகளை பார்ப்பது சிரமம். சக்திமான் ஸ்டிக்கரால் மட்டும் பிஸ்கட் விற்பனையானது என்று சொல்லிவிட முடியாது, அதன் சுவையும் நன்றாக இருந்தது. ஆனால் பார்லே - ஜி பிஸ்கட் தயாரிப்பு தற்போது நலிவடைந்துவருகிறது. தொடர்ந்து பார்லே - ஜி பிஸ்கட் நிறுவனம் நடைபெறுவதில் ஆளும் பாஜக அரசால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

parle - g
பார்லே - ஜி

பிஸ்கட் மீது விதிக்கப்பட்ட 18 சதவிகிதம் ஜிஎஸ்டியை மத்திய அரசு தளர்த்தாவிட்டால், 10 ஆயிரம் பார்லே - ஜி ஊழியர்கள் பணியை இழக்க வாய்ப்புள்ளது என அந்நிறுவனத்தின் நிர்வாகி மயங் ஷா தெரிவித்துள்ளார்.

1929ஆம் ஆண்டு இந்தியா முழுவதுமாக ஒரு லட்சம் ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது பார்லே நிறுவனம். பார்லே குல்க்கோ என்ற பெயரில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய இந்த பிஸ்கட் நிறுவனம், பார்லே - ஜி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 80, 90களில் கோலோச்சத் தொடங்கிய பார்லே - ஜி பிஸ்கட்ஸ், 2003ஆம் ஆண்டு உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் பிஸ்கட் என்ற பெருமையைப் பெற்றது.

parle - g
பார்லே - குல்க்கோ

இத்தனை ஆண்டுகாலத்தில் வீழ்ச்சியை சந்திக்காத இந்நிறுவனம், மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரியால் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிஸ்கட் மீது 18 சதவிகிதம் ஜிஎஸ்டியை ஆளும் பாஜக விதித்துள்ளது. இதனால் பார்லே - ஜி பிஸ்கட் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. அதாவது 5 ரூபாய்க்கு 8 பிஸ்கட் என்றால், தற்போது அதன் எண்ணிக்கையை குறைத்துள்ளது அந்நிறுவனம். இதனால் கிராமப்புறங்களில் இதன் விற்பனை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.

பார்லே நிறுவனத்தின் வருவாயில் பாதி கிராமப்புற மக்களை நம்பித்தான் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் பிஸ்கட்டின் விலையையும் அதன் எண்ணிக்கையையும் வைத்துதான் வாங்குவதா... வேண்டாமா! என முடிவு செய்கிறார்கள் என மயங் ஷா கூறுகிறார்.

britannia
பிரிட்டானியா

மத்திய அரசின் ஜிஎஸ்டியால் பாதிக்கப்படுவது பார்லே - ஜி நிறுவனம் மட்டும்தானா என்றால் இல்லை. பிரிட்டானியா நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி, மக்கள் 5 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கவே அவ்வளவு யோசிக்கிறார்கள். பொருளாதாரம் மிக மோசமான பின்னடைவை சந்தித்து வருகிறது என்கிறார்.

பார்லே - ஜி நிறுவனத்தின் நேரடியான போட்டியாளர் பிரிட்டானியா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டியால் கார் முதல் பிஸ்கட் வரை அத்தனை வியாபாரத்திலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Intro:Body:

parle G Workers fired upto 10,000

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.