மத்திய அரசு அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா சிறப்பு நிதிச் சலுகை குறித்து சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் தனது கருத்தை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பு நிறுவனங்களின் நிதி இழப்பு அபாயத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கும். அதேவேளை, கரோனா லக்டவுன் காரணமாக ஏற்பட்டுள்ள பெருந்தாக்கத்தை முழுமையாக சீர் செய்ய இந்த அறிவிப்பு போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை முதல்கட்டமானது மட்டுமே எனவும் தொடர்ச்சியான சீர்திருத்தங்களே எதிர்பார்த்த பலன்களைத் தரும் எனவும் மூடிஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக மூடிஸ், கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5.3 விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காடாக குறையும் என மூடிஸ் கணித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் வங்கித் துறை சிக்கல், சந்தை பணப்புழக்கம் கடும் சரிவைச் சந்தித்துவரும் நிலையில் தற்போது, கரோனா வைரஸின் தாக்கமும் இந்திய சந்தையை வெகுவாக பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொழிலாளர்கள் வீடு செல்ல ராணுவத்தை அனுப்ப வேண்டும்: முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சிறப்புப் பேட்டி