நாட்டின் நிதிநிலை அறிக்கை நாளுக்கு நாள் மந்தமாகி போவதை தடுக்க நிதிதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாட்டின் பொருளாதாரம் சரிவுக்கு காரணம் ரியல் எஸ்டேட், சர்வதேச வணிகம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறைவு தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியாவின் நிதிநிலை வளர்ச்சி 6 .8 சதவீதமாக குறைந்துள்ளது. 2015 ஆண்டுக்கு பிறகு இப்படி ஒரு வீழ்ச்சி சந்தித்தது இதுவே முதல் முறையாகும். மோடியின் பல கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது துறை அலுவலர்களால் சரியான பதில் அளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.