ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. அதில், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் கீழே:
- வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டி விகிதம் 35 புள்ளிகள் குறைக்கப்பட்டு, தற்போது 5.40 சதவிகிதமாக உள்ளது.
- ரிவர்ஸ் ரெப்போ வட்டியின் அளவு 5.15 சதவிகிதமாக மாற்றப்பட்டுள்ளது.
- டிசம்பர் 2019 முதல் என்.இ.எப்.டி. எனப்படும் இணையதள பணப்பரிவர்த்தனை 24 மணிநேரமும் செயல்படுத்தப்படும்.
- நாட்டின் வளர்ச்சி விகிதக் குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடானது 6.9 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- அடுத்த ஆறு மாதத்திற்கான சில்லறை பணவீக்க விகித இலக்கு 3.5 முதல் 3.7 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- உள்நாட்டுச் சந்தையின் தேவையை அதிகரிக்கவும், தனியார் முதலீட்டை அதிகரிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அடுத்த நிதிக்கொள்கைக் கூட்டம் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும்.