இந்தியா சிறந்து விளங்கும் விண்வெளித்துறையில் தனியார் துறை செயல்படுவதற்கு தடை உள்ளது. இஸ்ரோ விண்வெளி அமைப்பை தனியார் பயன்படுத்திக்கொள்ள இனி அனுமதி வழங்கப்படும். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு இனி அனுமதிக்கப்படும்.
உடனுக்குடன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்காம் நாள் அறிவிப்புகள்
Finance Minister Nirmala Sitharaman on Saturday will announce the 4th tranche of economic package at 4 PM.
17:07 May 16
16:59 May 16
மின்சாரத் துறையில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. சேவையில் குறைபாடு இருந்தால் நிறுவனங்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார் மையமாக்கப்படும்.
16:50 May 16
விமான போக்குவரத்து வழித்தடங்களை சீரமைத்து ரூ.1,000 கோடி அளவில் நிதி மிச்சம் செய்யப்படும். விமான நிலையங்களில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத்த திட்டம். விமான நிலையங்கள் பராமரிப்பு, அதன் சேவைகளை தனியார் துறைக்கு அதிகளவில் அனுமதி வழங்கப்படும்.
16:42 May 16
ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சில ஆயுதங்கள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்படும். பாதுகாப்புத் துறையில் மேக் இன் இந்தியா திட்டத்தை கவனமாக நடைமுறைப்படுத்தப்படும். பாதுகாப்பு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடு 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக அதிகரிப்பு.
16:37 May 16
நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் பகிர்வு அடிப்படையில் நிலக்கரி, சுரங்கத்துறையில் வர்த்தக ரீதியிலான அனுமதி. 500 நிலக்கரி படுகைகளில் மீத்தேன் வாயு எடுக்க ஏலம் விடப்படும்.
16:34 May 16
நிலக்கரி துறையில் முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு. துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கத் திட்டம். நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
16:20 May 16
ஒட்டுமொத்தமாக எட்டு துறைகளில் கொள்கை மாற்றங்கள் உருவாக்கப்படும். விண்வெளித்துறை, விமான போக்குவரத்து, மின் விநியோகம், அணு சக்தித்துறை ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
16:17 May 16
தொழில்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தொழில் பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அவை தரவரிசைப்படுத்தப்படும்.
16:14 May 16
துறை சார்ந்த முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஒவ்வொரு அமைச்சகத்திலும் திட்ட மேம்பாட்டுத் துறை உருவாக்கப்படும்.
16:09 May 16
சரக்கு மற்றும் சேவை வரி, நேரடி மானியம், திவால் சட்டம் ஆகியவை முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளாகும். இன்றைய அறிவிப்புகளும் இதுபோன்ற அடிப்படை கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பானவை.
16:07 May 16
உலகளவில் போட்டியிடுவதற்கு இந்தியா தற்போது தயாராக வேண்டும். இதற்காக பல்வேறு அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
16:01 May 16
நான்காம் நாள் செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிவிப்புகளை உடனுக்குடன் அளிக்கிறது உங்கள் ஈடிவி பாரத் செய்தி நிறுவனம். நிர்மலா சீதாராமன் பேசியதின் முக்கிய அம்சங்கள் உடனடியாக இதோ...
15:46 May 16
டெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள கரோனா சிறப்பு நிதிச் சலுகை குறித்த விரிவான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்றாவது நாளாக தற்போது வெளியிட்டுவருகிறார். முதல் மூன்று நாட்களில் சிறு, குறு தொழில், வேளாண்மை, மீன்பிடித் தொழில் ஆகியவை குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.