நாட்டின் நிதி நிலவரம் குறித்த முக்கிய புள்ளிவிவரத்தை சி.ஏ.ஜி. வெளியிட்டுள்ளது. 2020 ஏப்ரல்-செப்டம்பர் காலாண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ. 9.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த காலாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை, நிதிநிலை மதிப்பீட்டைக் காட்டிலும் 114.8 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.
வருவாய் மற்றும் செலவு தொகைக்கான வேறுபாடு கடந்தாண்டில் ரூ. 7.66 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2020-21இல் ரூ. 7.96 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் மொத்த செலவு ரூ. 14.79 லட்சம் கோடி எனவும், வரவு ரூ. 5.65 லட்சம் கோடி எனவும் சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு... விலையேற்றம்... தங்கத்தின் மீதான மவுசு குறைகிறதா?