அடுத்த காலாண்டில் இந்திய பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த டி அண்ட் பி எனும் பொருளாதாரா ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரண்டு மாதத்திற்கும் மேலாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் தாக்கம் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை காணப்பட்டது.
இந்த தாக்கத்தை சீர் செய்யும் விதமாக பொருளாதார சிறப்பு நிதிச் சலுகையை அரசு அறிவித்துள்ளது. நிதிச் சலுகை கள அளவில் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலம் பிடிக்கும் என ஆய்வறிக்கைத் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக மக்கள் கையிலிருக்கும் பணத்தை செலவு செய்ய முன்வருவார்கள் என்பதால் சந்தை தேவையில் சுணக்கம் ஏற்படும். இதன் காரணமாக, அடுத்த காலாண்டில் இந்திய பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: ஜி.எஸ்.டியில் புதிய வரியா? நிதியமைச்சகம் மறுப்பு