உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் கரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் வரலாறுகாணாத அளவுக்கு பாதிக்கப்பட்டு, மந்தநிலைக்குச் சென்றது.
இந்நிலையில் முன்னாள் திட்டக்குழு உறுப்பினரும் பொருளாதார வல்லுநருமான அபிஜித் சென், "இந்த நிதியாண்டில் (2020-21) நமது பொருளாதாரம் 10 விழுக்காடு சரியும்.
நிச்சயம் ரிசர்வ் வங்கி கணிப்பை போல பொருளாதார சரிவு 7.5 விழுக்காடாக இருக்காது, அதைவிட மோசமாக இருக்கும். மேலும், அடுத்த ஆண்டு பொருளாதாரம் பெரியளவில் உயரும் என்று மக்கள் நம்புகிறார்கள், ஆனால் எனக்கு அதில் சந்தேகம் உள்ளது.
எதையும் செய்யாமலேயே பொருளாதாரம் மீளும் என்று அரசு எதிர்பார்க்கிறது. அரசு சொன்னதைவிட மிகக் குறைவாகவே செலவு செய்கிறது" என்றார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராடிவருகின்றனர். வேளாண்மை சார்ந்த விஷயங்களில் முக்கிய வல்லுநராக கருதப்படும் அபிஜித் சென் கூறுகையில், "வேளாண் சட்டங்கள் அவசரகதியில் கொண்டுவரப்பட்டதே இந்த விஷயத்தில் முக்கியப் பிரச்சினை. எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் உள்ளதாலேயே விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
மேலும், மோடி அரசால் நிச்சயம் 2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக முடியாது" என்றார்.
இதையும் படிங்க: புதிய வடிவம் எடுத்த டி.பி.எஸ். வங்கிக்கு ரூ.2,500 கோடி மூலதனம்!