ETV Bharat / business

'ஜி-20 நாடுகளிலேயே மிக மோசமான பொருளாதார பாதிப்பை இந்தியா எதிர்கொண்டுள்ளது' - சர்வதேச நிதியம் - கீதா கோபிநாத்

ஜி-20 நாடுகளிலேயே இந்தியாதான் மிக மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

IMF says Indian economy worst hit by Covid-19

author img

By

Published : Sep 3, 2020, 5:51 PM IST

Updated : Sep 3, 2020, 6:50 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு வல்லரசு நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், "ஜூன் மாதத்தில் நிறைவடையும் காலாண்டில் முன்னணி உலகப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாதான் மிக மோசமான ஜிடிபி சரிவை எதிர்கொண்டுள்ளது" என்றார்.

இது குறித்து கீதா கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுள்ள வரைபடத்தின் மூலம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜிடிபி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 25.6 விழுக்காடு சரிந்துள்ளதும், ஜி -20 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம்தான் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனின் பொருளாதாரம் 20.4 விழுக்காடு வரை சரிவை எதிர்கொண்டுள்ளது. அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் 11.7 விழுக்காடும் அமெரிக்காவின் பொருளாதாரம் 9.1 விழுக்காடும் சரிவைச் சந்தித்துள்ளன.

மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டும் 12.3 விழுக்காடு உயர்ந்துள்ளது என்பனவும் தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தப் பெரும் ஊரடங்கால், 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.

2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஜிடிபி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 2020ஆம் ஆண்டில் முக்கிய உலக நாடுகளின் ஜிடிபி சரியும்" எனப் பதிவிட்டுள்ளார்.

  • In #GreatLockdown Q2 2020 GDP growth at historical lows. Graph puts G20 growth numbers on a comparable scale, quarter-on-quarter non-annualized. Should expect rebounds in Q3 but 2020 overall will see major contractions. China recovers strongly in Q2 after collapse in Q1. pic.twitter.com/OcgaZsrAD6

    — Gita Gopinath (@GitaGopinath) September 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதரம் 23.9 விழுக்காடு குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முன்னாள் நிதி செயலர் சுபாஷ் சந்திர கார்க், "நாம் இன்னும் சரிவில் இருந்து மீளவில்லை. ஜூலை - செப்டம்பர் வரைலியான காலாண்டின் இந்தியப் பொருளாதாரம் சுமார் 12 முதல் 15 விழுக்காடு வரை சரியும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

Last Updated : Sep 3, 2020, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.