கரோனா பரவலின் தாக்கம் நாட்டில் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்திவரும் நிலையில், வேலை வாய்ப்புத் துறையிலும் இது எதிரொலித்துள்ளது.
கரோனாவால் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து தவித்துவருகின்றனர். குறிப்பாக நகர்புற பணியாளர் பலர் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வேலையிழந்துள்ளனர்.
அதேவேளை இந்தச் சூழலானது வீட்டிலிருந்து பணிபுரியும் திறன் சார்ந்த வேலையாள்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக நவ்கரி என்ற வேலைவாய்ப்பு தகவல் தரும் நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டில் வொர்க் ப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நபர்கள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளனர்.
அத்துடன் கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் வீட்டிலிருந்து வேலைப் பார்க்கும் நபர்களை பணிக்கு எடுக்கும் எண்ணிக்கை ஏழு மடங்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: நிதி திரட்ட பங்குகளை விற்கும் இந்திய வங்கிகள்!