ETV Bharat / business

ஜி.எஸ்.டி அமல்படுத்துவதில் குளறுபடி - சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல் - rajiv maharishi

டெல்லி சரக்கு மற்றும் சேவை வரியை சரியான விதத்தில் மத்திய அரசு அமல்படுத்துவதவில்லை என அரசு தலைமை தணிக்கையாளரின் அறிக்கை தெரிவிக்கிறது

GST
author img

By

Published : Jul 31, 2019, 9:35 PM IST

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக அரசுத் தலைமை தணிக்கையாளர் ராஜிவ் மகரிஷி சார்பில் அறிக்கையானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிகளைச் சரியான முறையில் அமல்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, ஜி.எஸ்.டி வரி வசூல் தொடர்பான படிவங்கள் முறையாகத் தாக்கல் செய்யப்படுவதில்லை எனவும், மாதம்தோறும் இந்த படிவங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநில அரசுகளுக்கான வருவாய் பகிர்விலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கான வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மறைமுக வரி வருவாய் தேய்ந்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு முன்பாக மத்திய அரசு சோதனை ஓட்டம் செய்துபார்க்காததே இந்த சிக்கலுக்கெல்லாம் காரணம் என சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த பொறுப்பற்ற அணுகுமுறையால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

rah
ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு

Intro:Body:

8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு! #8LaneExpressway

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.