கரோனா சூழல், உலக பொருளாதாரத்தின் மீதான அதன் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.
கடும் சரிவில் தங்கம் விலை...
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்து வருகிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி 22 கேரட் தங்கம் மற்றும் ஆபரணத் தங்கத்தின் விலைகள், சவரனுக்கு முறையே 600, 660 ரூபாய் குறைந்து நகை வாங்குபவர்களை பெரும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
அதன் தொடர்ச்சியாக இன்றும் (ஆக.09) தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து மக்களை உச்சி குளிர வைத்துள்ளது.
22 கேரட் தங்கம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட கிராமிற்கு 59 ரூபாய் குறைந்து நான்காயிரத்து 380 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சவரனுக்கு 472 ரூபாய் குறைந்து 35 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கம்
24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 65 ரூபாய் குறைந்து 4,778 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமிற்கு 1 ரூபாய் 50 காசுகள் குறைந்து 68.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிலோ வெள்ளி 1,500 ரூபாய் குறைந்து 68,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: 'ரெப்போ வட்டி விகிதம் 4 விழுக்காடாக தொடரும்' - சக்திகாந்த தாஸ்