நாளுக்கு நாள் உலகப் பொருளாதாரம் தடுமாற்றத்தைச் சந்திக்கும் நிலையில் 11 ஆண்டுகள் கண்டிடாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் அண்ட் டெவெலப்மென்ட் (Organisation for Economic Cooperation and Development) அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020ஆம் ஆண்டுவரை நீடிக்கும் எனவும் இந்த ஆண்டு 3.2 விழுக்காடுகள் மட்டுமே உலகப் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், அந்நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு இந்த வளர்ச்சி 3.4 விழுக்காடுகள் உயரும் எனவும், அமெரிக்க - சீனா இடையே வர்த்தகப் போர் நிலவுவதால் தான் உலகப் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்திக்கிறது எனவும் பொருளாதார அமைப்பான ஆர்கனைசேஷன் பார் எகனாமிக் அண்ட் டெவெலப்மென்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'எந்த நிகழ்ச்சியாலும் இந்திய பொருளாதாரத்தின் நிலையை மறைக்க முடியாது' - ராகுல்காந்தி ட்வீட்!