பிரபல ஆன்லைன் நிறுவனம் ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளருக்கான தேவையை மேலும் வசதிப்படுத்தும் வகையில் ஆஃப்லைன் ஃபர்னிச்சர் மையத்தை தொடங்கவுள்ளது.
பெங்களூரில் 'ஃபரிசுயூர்' என்ற பெயரில் தொடங்கவுள்ள இந்த ஃபர்னிச்சர் மையம் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆன்லைனில் தெரிய வரும் ஆஃபர்களை நேரில் சென்று வாங்கும் வசதிக்கு ஏற்றவாறு இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பர்னிச்சர் மையம் ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில், அறைகலன்களை தொட்டுணர்ந்து பார்த்து தேர்ந்தெடுக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அறைகலன்களை கூகுள் லென்ஸ் மூலம் புகைப்படம் எடுத்து அதை ஆன்லைனிலும் பெற்றுக் கொள்ளலாம்.
'ஃபரிசுயூர்' மையம் வாடிக்கையாளர்களுக்கு சுலபமாக நேரில் சென்று வாங்கும் வசதிக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.