மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நேற்று (பிப். 01) தாக்கல்செய்தார். அதில், நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்கான தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 678 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.
தனது நிதிநிலை அறிக்கை உரையில் அவர், ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக, தூய்மை இந்தியா திட்டம் 2.0 அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி (பிளாஸ்டிக்), காற்று மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்களுக்குத் தீர்வு காணப்படும் என்றார்.
குறிப்பாக, நகர்ப்புற காற்று மாசு சிக்கலுக்குத் தீர்வுகாண 10 லட்சத்துக்கும் அதிகம் மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களுக்கு இரண்டாயிரத்து 217 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!