ETV Bharat / business

FASTag இல்லையேல் இருமடங்கு கட்டணம் - நினைவிருக்கட்டும் மக்களே! - ஃபாஸ்டேக் பெறுவது எப்படி

பிப்ரவரி 16ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச் சாவடியை வாகனங்கள் கடக்க முற்பட்டால் இரு மடங்கு பணம் செலுத்தவேண்டியிருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Fastag declared mandatory from midnight tomorrow, ஃபாஸ்டேக் கட்டாயம், fastag mandatory, how to add fastag, how to register fastag, how to recharge fastag, fastag recharge, ஃபாஸ்டேக் பதிவு, ஃபாஸ்டேக் பதிவு
is Fastag mandatory
author img

By

Published : Feb 14, 2021, 7:43 PM IST

Updated : Feb 14, 2021, 7:55 PM IST

டெல்லி: பிப்ரவரி 16ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி பயனர்கள் எவ்வாறு ஃபாஸ்டேக் ஸ்டிக்கரைப் பெறுவது, அதனை ரீசார்ஜ் செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

FASTag ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் பெறுவது எப்படி?

வாகன உரிமையாளர்கள், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் இருக்கும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் வழங்கும் அலுவலர்கள் அல்லது முகவர்களின் உதவியோடு வாகனத்தில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை பெற்று வாகனங்களில் ஒட்டிக் கொள்ளலாம்.

ஃபாஸ்டேக் கையாளும் முறை?

அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், அமேசான், பேடிஎம் போன்ற இணையப் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப் பயன்படும் செயலிகள் வாயிலாகவும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்கி அதனுடன் உங்களுடைய வாகன பதிவு எண், கைபேசி எண் ஆகியவற்றை வங்கிக் கணக்குடனோ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது யுபிஐ பணப்பரிமாற்ற செயலியுடனோ இணையம் மூலம் இணைத்துக் கொள்ளலாம்.

ஃபாஸ்டேக் முறையில் பணம் செலுத்துவது எப்படி?

  • தனிநபர்கள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை தங்களின் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.
  • இந்த ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை பெற வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், வாகன உரிமையாளரின் புகைப்படம், வீட்டு முகவரி மற்றும் அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு), ஆதார் அட்டை ஆகிய அடையாள அட்டைகளை இதற்குப் பயன்படுத்தலாம்.
  • வாகன ஓட்டி, ஒவ்வொரு சுங்கச்சாவடியைக் கடக்கும் போதும், எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள, ஃபாஸ்டேக் கணக்குடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி வரும்.
  • இதன்மூலம், அந்தக் கணக்கில் இன்னும் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அவர்களால் அறிய முடியும்.
  • கணக்கில் பணம் குறைந்துவிட்டால், அதில் பணத்தை ரீசார்ஜ் செய்ய வசதி உள்ளது.

யார் யாருக்கு ஃபாஸ்டேக் கட்டணத்திலிருந்து விலக்கு

தேசிய நெடுஞ்சாலை விதிகளின்படி, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், கேபினட் அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, மத்திய இணை அமைச்சர், ஒன்றிய பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், முப்படை தலைமைத் தளபதி, சட்டப்பேரவை சபாநாயகர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (டெல்லி மற்றும் அவரது சொந்த தொகுதி என இரு ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும்), ராணுவ துணைத் தளபதி, மாநில அரசு தலைமைச் செயலர், மத்திய அரசுத் துறைகளின் செயலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் (மாநிலத்தில் பயன்படுத்த ஒரு ஸ்டிக்கர் வழங்கப்படும்) ஆகியோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

காவல் துறை வாகனங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வாகனங்கள், அவசர ஊர்திகள், மத்திய ஆயுதப்படைகள், பாதுகாப்புத் துறை வாகனங்கள், அரசுப் பணியில் உள்ள அரசுத் துறைகளின் வாகனங்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் (ஒரு ஸ்டிக்கர் வழங்கப்படும்) ஆகியவற்றும் ஃபாஸ்டேக் கட்டாயமில்லை.

பரம் வீர் சக்ரா, அசோக சக்ரா, மகா வீர் சக்ரா, கீர்த்தி சக்ரா, வீர் சக்ரா, செளரிய சக்ரா ஆகியவை வழங்கி கெளரவிக்கப்பட்டு அதற்கான அடையாள அட்டையுடன் இருப்பவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சீருடையில் உள்ள காவல் துறையினர், மத்திய துணை ராணுவப்படையினர் செல்லும் வாகனங்கள், இந்திய நெடுஞ்சாலைத் துறை ஆய்வுப்பணி வாகனங்கள் ஆகியவற்றிற்கு ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 14, 2021, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.