ETV Bharat / business

அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடியின் முழு விவரம்

author img

By

Published : May 17, 2020, 11:05 PM IST

டெல்லி: பிரதமர் மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி தொகையின் முழு விவரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

Nirmala
Nirmala

கரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட முடக்கம் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கத்திலிருந்து மீண்டெழ தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி ரூ. 20 லட்சம் கோடிக்கு நிதிச் சலுகையை வெளியிட்டுள்ளார்.

இந்த நிதிச் சலுகையின் விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக வெளியிட்டார். சிறு, குறு தொழில், வேளாண்மை, மீன்பிடித் தொழில், நிலக்கரி, மின்சாரம், விமானப் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு, சுகாதாரம், பொதுத்துறை நிறுவனங்கள், ஊரக வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ. 20 லட்சம் கோடி தொகையின் முழு விவரத்தையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டார்.

ரூ.20 லட்சம் கோடியின் முழு விவரம்
ரூ.20 லட்சம் கோடியின் முழு விவரம்

அதன்படி, முதல் நாள் அறிவிப்பின் போது ரூ. 6 லட்சம் கோடி, இரண்டாம் நாள் அறிவிப்பில் ரூ. 3.10 லட்சம் கோடி, மூன்றாம் நாள் அறிவிப்பில் ரூ. 1.50 லட்சம் கோடி, நான்காம் மற்றும் ஐந்தாம் நாள் அறிவிப்பில் ரூ. 48,100 கோடி என ஐந்து நாட்களில் மொத்தம் ரூ. 11.02 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பின் முதல்கட்ட நடவடிக்கைக்காக ரூ.1.92 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. மேலும், பொருளாதார ஊக்குவிப்புக்காக ரிசர்வ் வங்கி சார்பில் ரூ. 8.01 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. எனவே, மொத்தம் ரூ. 20 லட்சம் கோடி முறையாக ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்: நிர்மலா சீதாராமனிடம் சிதம்பரம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.