ETV Bharat / business

கேரள நிதி நிறுவனம் சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் கடன்!

திருவனந்தபுரம்: பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை கேரள நிதிக் கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

COVID-19  coronavirus  Kerala Financial Corporation  MSME  கேரள நிதி நிறுவனம் சிறு, குறு தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் கடன்!  கேரள நிதி நிறுவனம், சிறு குறு தொழிலாளர்கள் கடன், கேரள அரசு, கரோனா பரவல், கோவிட்19

author img

By

Published : Apr 3, 2020, 9:18 PM IST

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாடு முழுக்க 21 நாட்கள் பூட்டுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநில, மாவட்ட, கிராம எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்கள் வசித்த இடங்களின் தெருக்களும் அடைக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு பணிகளில் சுகாதாரப் பணியாளர்களும், பாதுகாப்பு பணியில் காவல் துறையினரும் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறு குறு நிறுவனங்களுக்கு கே.எஃப்.சி என்னும் கேரள நிதிக் கழகம் கடன் வழங்க சம்மதித்துள்ளது. இதில் சிறு குறு தொழிலாளர்கள் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம்.

இது குறித்து கே.எஃப்.சியின் தலைமை நிர்வாக இயக்குனர் சஞ்சய் கவுல் கூறுகையில், “தொற்றுநோயால் ஏற்படும் இடையூறுகளை கேஎஃப்சி தணிக்கும். புதிய கடன் திட்டங்கள் வணிகங்களின் தொடர்ச்சியை உறுதி செய்யும்” என்றார்.

கே.எஃப்.சி. மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் வணிகக் கடன் வழங்கும் நிறுவனம் ஆகும். கே.எஃப்.சி.யின் இந்த நடவடிக்கை நாட்டிலேயே முன்மாதிரியாகத் திகழ்கிறது.

இதையும் படிங்க: கரோனா தொகுப்பு: தள்ளாடும் எஸ்.பி.ஐ.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.