இந்தியாவில் கடந்த ஆண்டில் கடும் வறட்சி காரணமாக விவசாயம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாகப் பருத்தி பயிரிடும் பகுதிகளில் வறட்சி காரணமாக, இந்தியாவின் பருத்தி உற்பத்தி 7.87 விழுக்காடு சரிவடைந்துள்ளது.
2018-19ஆம் ஆண்டின் பருவத்தில், 343 லட்சம் பேல்கள் (170 கிலோ ஒரு பேல் ) குறையலாம் எனவும் அறிக்கைகள் கூறுவது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இதுகுறித்து இந்திய ஜவுளி தொழில்துறையின் (CITI) தலைவர் சஞ்சய் ஜெயின் கூறியதாவது, ‘கடந்த செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு முடிவடைந்த பருவத்தில் பருத்தி உற்பத்தியில் 370 லட்சம் பேல்கள் இருந்ததாகவும், கடந்த 12 ஆண்டுகளில் மிக மோசமான உற்பத்தி வெறும் 348 லட்சம் பேல்களைக் கொண்டது எனவும், ஆனால் நடப்பு ஆண்டில் பருத்தி உற்பத்தி 343 லட்சம் பேல்களாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு நெசவு நிறுவனத்தின் அறிக்கைகளில், அக்டோபர் - செப்டம்பர் பருவத்திற்கான பருத்தி பருவத்தில், அது வளர்ந்து வரும் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட உண்மையான தரவுகளின் அடிப்படையில், நவம்பர் 22, 2018 வரையிலான பருத்தி விளைச்சல் 361 லட்சம் பேல்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடும் வறட்சி: பருத்தி உற்பத்தி மிகப்பெரிய அளவில் பாதிப்பு! - no rain
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யாதக் காரணத்தால், விவசாயதிற்கு நீரின்றி பருத்தி உற்பத்தி பெருமளவு பாதிப்படைந்துள்ளதாக இந்திய ஜவுளித்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.