கலாசேத்திரா நிறுவனம் 1936ஆம் ஆண்டு ருக்மிணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்தியக் கலையை, குறிப்பாக பரதநாட்டியம், இசையைப் போற்றி வளர்க்கும்விதமாக இந்த நிறுவனம் செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் சென்னை கலாஷேத்ராவில் ஆடிட்டோரியம் கட்டியதில் தேவையில்லாத செலவு செய்ததாகச் சங்கீத நாடக அகாதெமி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கலாஷேத்ரா நிறுவனத்தில் கூத்தம்பலம் ஆடிட்டோரியத்தை புதுப்பித்ததற்காக 7.02 கோடி ரூபாய் தேவையில்லாத செலவு செய்ததாக பரதநாட்டிய கலைஞரும் சங்கீத நாடக அகாதெமியின் முன்னாள் தலைவருமான லீலா சாம்சன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக அலுவலர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற லீலா சாம்சன், 'ஓகே கண்மணி' படம் மூலமாக தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். இவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'இந்தியப் பொருளாதாரம் தினமும் மூழ்குகிறது' - ப. சிதம்பரம் வேதனை