ETV Bharat / business

ஜூம் செயலியில் GIF சேவை நீக்கம்!

வாஷிங்டன்: ஜூம் செயலியில் உள்ள சாட் திரையில் ஜிஃப் (GIF) சேவை நீக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஜூம்
ஜூம்
author img

By

Published : May 26, 2020, 11:47 PM IST

பிரபலமான ஆன்லைன் காணொலி கூட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் ஜூம் செயலியில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு உள்ள காரணத்தினால் அரசு உரையாடலுக்கு ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் பாடங்கள் எடுப்பதற்கு ஜூம் செயலியைத் தவிர்த்து வந்தனர். இந்நிலையில், ஜூம் செயலியின் சாட் திரையில், GIF சேவையை நீக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், " ஜிஃப் வசதியை தற்காலிகமாக செயலியிலிருந்து நீக்கியுள்ளோம். விரைவில் தொழில்நுட்பமும், பாதுகாப்பும் பலப்படுத்தப்படும். மீண்டும் ஜிஃப் வசதியை மீண்டும் இணைப்போம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், ஃபேஸ்புக் ஜிஃபியை(GIPHY) 400 மில்லியன் டாலருக்கு வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இன்ஸ்டாகிராமிலும் GIF வசதியை இணைக்கவுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: 600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய பெரு நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.