ETV Bharat / business

கரோனா: இந்தியாவில் வீடியோக்களின் தரத்தை குறைத்த யூடியூப்! - howlong the video quality will be reduced

கரோனா பாதிப்பால் இந்தியாவில் அதிகமானோர் இணையதளத்தை பயன்படுத்துவதால் யூடியூப் வீடியோக்களின் தரத்தை மார்ச்31 ஆம் தேதி வரை குறைப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

will you tube reduce the video quality in lockdown  indian lockdown sees reduction in video quality of video players  howlong the video quality will be reduced  size of the video quality of you tube to be reduce
கரோனா: இந்தியாவில் வீடியோக்களின் தரத்தை குறைத்த யூடியூப்
author img

By

Published : Mar 25, 2020, 11:36 PM IST

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பொழுது போக்கிற்காக பெரும்பாலானோர் தொலைக்காட்சி மற்றும் இணையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தச்சூழ்நிலையில், வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வரை இந்தியாவில் யூடியூப் வீடியோ தரத்தை குறைப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோன்று கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் யூடியூப் வீடியோவின் தரம் குறைக்கப்பட்டது. வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் யூடியூப் பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கலை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், பேஸ்புக் நிறுவனம் தங்களுடைய அப்ளிக்கேஷன்களில் வீடியோக்களின் தரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதர வீடியோ ஸ்டீரிம் தளங்களான அமேசான், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஆகியவைகளும் தங்களது வீடியோக்களின் தரத்தை குறைத்துள்ளன.

இதையும் படிங்க: உபர் சீருந்து சேவை 21 நாள்கள் நிறுத்திவைப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.