ETV Bharat / business

ஆண்டு இறுதிக்குள் வருகிறது டெலிகிராமின் 'குரூப் வீடியோ அழைப்புகள்'

ஊரடங்கின்போது காணொலி அழைப்புகளின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதை கருத்திற்கொண்டு, டெலிகிராம் செயலியும் தங்கள் பங்கிற்கு இந்த அம்சத்தை செயல்படுத்தும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. இதன் பதிப்பு இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

telegram new update
telegram new update
author img

By

Published : Apr 27, 2020, 2:15 PM IST

சமூக வலைதள செயலியான டெலிகிராம் தங்களின் பிரதான குழு காணொலி அழைப்புகளுக்கான பதிப்பை, தயார் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பதிப்பு பயனர்களுக்கு ப்ளே ஸ்டோர் மூலமாக, இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டில் மக்கள் எவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பினார்களோ, அதேபோல தற்போது காணொலி அழைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாகத்தைப் போக்கும் வகையில் நிறைய செயலிகள் புழக்கத்தில் உள்ளன.

ஆனால், சில பயனர்களுக்கு எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும்; வேறு சில அதிகப்படியான பாதுகாப்பினை அளிக்கவல்லதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இவ்வேளையில் டெலிகிராம் நிறுவனம் இவ்விரண்டு பரிமாணங்களையும் கருத்திற்கொண்டு, தனது செயலியை வடிவமைத்து வருவதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் இந்தியச் சந்தைகளுக்கு வருகிறது மோட்டோரோலா எட்ஜ் ரகங்கள்!

டெலிகிராம் தற்போது 40 கோடி மாதாந்திர பயனர்களை அடைந்துள்ளது. இதுவே 2019ஆம் ஆண்டில் 30 கோடியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 லட்சம் புதிய பயனர்கள் டெலிகிராமில் பதிவு செய்கிறார்கள்.

கோப்புறைகள், கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் டெஸ்க் டாப் ஆதரவு போன்ற அம்சங்கள் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு உதவியாக இருப்பது தான், இந்த வளர்ச்சிக்கான காரணம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.