ETV Bharat / business

82 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த தொலைதொடர்பு நிறுவனங்கள்: ட்ராய் அறிக்கை - tamil business news

ட்ராய் வெளியிட்டுள்ள தகவலின்படி, தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஏப்ரல் மாதத்தில் சந்தாதாரர்களை பெருமளவில் இழந்துள்ளனர். ஏர்டெல் 52 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நிலையில், வோடபோன் ஐடியா 45 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது.

telecom subscribers
telecom subscribers
author img

By

Published : Jul 25, 2020, 9:12 PM IST

டெல்லி: கரோனா ஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரல் மாதத்தில் 82 லட்சம் சந்தாதாரர்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இழந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

ட்ராய் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏர்டெல் 52 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நிலையில், வோடபோன்-ஐடியா 45 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது.

ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16 லட்சம் சந்தாதாரர்கள் புதிதாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இதன் முந்தைய மாத சந்தாதாரர்கள் சேர்கையை விட குறைவு என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஜியோமார்ட் செயலி: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள் தரவிறக்கம் செய்யலாம்!

ஏப்ரல் மாத இறுதியில் தொலைதொடர்பு சந்தை மதிப்பில் 33.85 விழுக்காடு தன்னகத்தே கொண்டு முதலிடத்தில் ரிலையன்ஸ் ஜியோவும், 28.06 விழுக்காடு சந்தை மதிப்புடன் ஏர்டெல் நிறுவனமும் இருந்தது. முறையே வோடபோன் - ஐடியா 27.37 விழுக்காட்டுடனும், அரசின் பி.எஸ்.என்.எல் 10.43 விழுக்காடு சந்தை மதிப்புடனும் உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.