டெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைத்தொடர்பு சார்புடைய 2.32 விழுக்காடு பங்குகளை, தனியார் பங்கு வர்த்தகச் செயல்பாடுகளை நிர்வகிக்கும் அமெரிக்க நிறுவனமான கே.கே.ஆர் ரூ. 11ஆயிரத்து 367 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
கே.கே.ஆர் நிறுவனம் ஆசிய நிறுவனங்களில் செய்யும் முதல் பெரும் முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது. வணிகச் சந்தை மதிப்பில் ரூ.4.91 லட்சம் கோடி ரூபாயும், நிறுவனச் சந்தை மதிப்பில் ரூ.5.16 லட்சம் கோடிக்கும் பங்குகளின் மதிப்பு தீர்மானிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைத்தொடர்பு சார்புடைய 2.32 விழுக்காடு பங்குகளை கே.கே.ஆர் நிறுவனம் ரூ. 11ஆயிரத்து 367 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களைக் கவர மாருதி சுசூகியின் புதிய திட்டம்!
அதாவது முதலில் தனது எண்ணெய் வர்த்தகத்தில் கணிசமான பங்குகளை சவூதியின் அரோம்கோ நிறுவனத்துக்கு விற்பனை செய்து, பணத்தைத் திரட்டும் நடவடிக்கையில் இறங்கியது. இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே இது தொடர்பான ஒப்பந்தம் முடிவான நிலையில், ஒரு சில காரணங்களால் அது தாமதமாகியுள்ளது.
இச்சூழலில், சில வாரங்களுக்கு முன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஜியோவின் 9.99 விழுக்காடு பங்குகள் ரூ.43,547 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து அண்மையில் சில்வர் லேக் நிறுவனம், ஜியோவின் 1.15 விழுக்காடு பங்குகளை ரூ.5,665.75 கோடிக்கு வாங்கியது.
இந்த ஒப்பந்தம் நடந்து முடிந்த ஒரு சில தினங்களில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான விஸ்தாவுக்கு ஜியோவின் 2.3 விழுக்காடு பங்குகளை ரூ.11,367 கோடிக்கு விற்பனை செய்வதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
வட்டிக் குறைப்பு, இ.எம்.ஐ. செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் - ரிசர்வ் வங்கி
இவ்வேளையில் ஜியோவின் 1.34 விழுக்காடு பங்குகளை ரூ.6,598.38 கோடிக்கு ஜெனரல் அட்லாண்டிக் வாங்கியுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்தது. அமெரிக்காவைச் சேர்ந்த பங்கு முதலீட்டு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் ஆசியாவில் மேற்கொண்ட மிகப்பெரிய முதலீடு இதுவாகும்.
இதன்மூலம் ஜியோவின் குறிப்பிட்ட சதவீத பங்குகள் விற்பனை வாயிலாக மொத்தம் ரூ.67,194.75 கோடியை ரிலையன்ஸ் திரட்டியிருந்தது.