டெல்லி: டெல்லி - ஆக்ரா சுங்கச் சாலையில் தான் கொண்டிருந்த 100 விழுக்காடு பங்கினையும் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம் விற்றுள்ளது.
க்யூப் ஹைவேஸ் நிறுவனத்திற்கு தான் கொண்டிருந்த 100 விழுக்காடு பங்கினை, ரூ.3,600 கோடிக்கு ரிலையன்ஸ் இன்ஃப்ரா விற்றுள்ளது. இதன்மூலம் தனது முழுக் கடன் தொகை கணக்கை நிறுவனம் குறைத்துக்கொண்டுள்ளது.
தற்போது இருந்த கடன் அளவான ரூ.17,500 கோடியிலிருந்து தோராயமாக 20 விழுக்காடு குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது தற்போது நிறுவனத்தின் கடன் பாக்கி ரூ.14,000 கோடியாக உள்ளது.
இந்தப் பங்கு விற்பனை நிகழ்ந்த நேரத்தில், மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பங்கின் விலை 4.84 விழுக்காடு அளவு உயர்ந்து ரூ.28.15ஆக வர்த்தகமானது.
2021ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளில், பச்சை வர்ணத்தில் மிளிர்ந்த பங்குச் சந்தை!