ETV Bharat / business

லட்சத்தில் முன்பதிவான நோட் 8 சீரிஸ்... புதிய சாதனையில் சியோமி

author img

By

Published : Aug 25, 2019, 6:57 PM IST

சியோமி நிறுவனம் தனது அடுத்த படைப்பாக ரெட்மி நோட் 8 சீரிஸின் முன்பதிவு தொடங்கி புதிய சாதனை படைத்துள்ளது.

நோட் 8 சீரிஸ்

கைப்பேசி துறையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் சியோமி நிறுவனத்தின் புதிய படைப்பான ரெட்மி நோட் 8, நோட் 8 ப்ரோ செல்போன்கள் சீன சந்தையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நோட் 8 சீரிஸ்கான முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில், 10 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் முன்பதிவு செய்துள்ளதாக சியோமி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளத.

சியோமி நிறுவனத்தின் முந்தைய வெளியீடான நோட் 7 செல்போன் உலகளவில் 20 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருந்தது. நோட் 8 சீரிஸ் செல்போன்கள் கேமிங் சப்போர்ட், லிக்விட் கூலிங் வசதி, அதீத திறன்கொண்ட பேட்டரியும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

  • நோட் 8 ப்ரோவில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி எஸ்ஓசி (MediaTek Helio G90T SoC) என்னும் புதிய ப்ராசஸர் அறிமுகம் செய்கிறது
  • நான்கு பின்புற கேமராக்களும், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 25x ஜூமிங் வசதி கொண்டது
  • 4500mah பேட்டரி திறன்
  • 18w அதிவேக சார்ஜிங் வசதி

ஆகஸ்ட் 29ஆம் தேதி சினாவில் வெளியாகும் நோட் 8 சீரிஸ் விரைவில் மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.