ETV Bharat / business

அரசின் அறிவிப்பை காற்றில் பறக்க விட்ட விமான நிறுவனங்கள்! டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! - business news

கோ ஏர், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்பட தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்கள் அரசு உத்தரவு எதுவுமின்று விமான முன்பதிவை இணைதளத்தில் தொடங்கியுள்ளன. மே 16ஆம் தேதிக்கு பிறகுள்ள பயணத்துக்கான முன்பதிவை ஸ்பைஸ் ஜெட், கோ ஏர் நிறுவனங்களும், ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகான பயணங்களுக்கு விஸ்தாரா, இண்டிகோ ஆகிய நிறுவனங்களும் முன்பதிவை தொடங்கியுள்ளது.

flight ticket booking
flight ticket booking
author img

By

Published : Apr 27, 2020, 10:07 AM IST

Updated : Apr 27, 2020, 12:00 PM IST

டெல்லி: அரசின் அறிவிப்புகள் இல்லாமல் விமான சேவை முன்பதிவை, தனியார் விமான நிறுவனங்கள் தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோ ஏர், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்பட தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்கள் விமான முன்பதிவை இணைதளத்தில் தொடங்கியுள்ளன. மே 16ஆம் தேதிக்கு பிறகுள்ள பயணத்துக்கான முன்பதிவை ஸ்பைஸ் ஜெட், கோ ஏர் நிறுவனங்களும், ஜூன் 1ஆம் தேதிக்கு பிறகான பயணங்களுக்கு விஸ்தாரா, இண்டிகோ ஆகிய நிறுவனங்களும் முன்பதிவை தொடங்கியுள்ளன.

மார்ச் மாத ஊரடங்கின் போதே விமான சேவைகளை நிறுத்திய இந்திய அரசு, அதன் முன்பதிவையும் மேற்கொள்ள கூடாது என்று அறிவித்திருந்தது. இதனையடுத்து மே 3ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட ஊரடங்கும் அரசால் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து விமான நிறுவனங்கள் மே 3ஆம் தேதிக்கு அடுத்து விமான பயண டிக்கெட் முன்பதிவை அவர்கள் இணையதளத்தின் முலம் தொடங்கியது. இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதை அடுத்து, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஹர்தீப் சிங் பூரி, 'ஊரடங்கு தொடர்பான அடுத்த உத்தரவு வரும் வரை, டிக்கெட் முன்பதிவை மேற்கொள்ள வேண்டாம்' என, விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம், முன்பதிவை நிறுத்தியது. ஆனால், தனியார் விமான நிறுவனங்கள் டிக்கெட் முன்பதிவை தொடர்ந்தன. இதனால், பயணியரிடமும் குழப்பம் ஏற்பட்டது. இச்சூழலில், மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது;

மே 4ஆம் தேதிக்கு பிறகான விமான பயணங்களுக்கு, சில நிறுவனங்கள் தற்போது டிக்கெட் முன்பதிவு செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், மே 3 வரை விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதில், மே, 4க்குப் பின், விமானங்களை இயக்கலாம் என்றோ, அதற்கான டிக்கெட் முன்பதிவை மேற்கொள்ளலாம் என்றோ, எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. எனவே, டிக்கெட் முன்பதிவை விமான நிறுவனங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

கோவிட்-19 தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின், ஊரடங்கு தொடர்பாக, மத்திய அரசிடமிருந்து அடுத்த உத்தரவு வரும் வரை, டிக்கெட் முன்பதிவு செய்யக் கூடாது. விமானங்களை எப்போது இயக்குவது குறித்து, தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த வணிக ரீதியிலான இயக்கங்ளை தொடங்க வேண்டும்! - சிஐஐ கணக்கெடுப்பு

Last Updated : Apr 27, 2020, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.