ETV Bharat / business

கிருஷ்ணகிரியில் ஓலா ஃபியூச்சர் பேக்டரி: சீறிப்பாய வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ்!

டெல்லி: கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை ஆரம்பித்திட ஓலா நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

author img

By

Published : Mar 8, 2021, 9:22 PM IST

Ola
ஓலா

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னரே, ஓலா நிறுவனம் கால்பதிக்க முடிவு செய்துவிட்டது. உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையமான ஓலா ஃபியூச்சர் பேக்டரி திட்டத்தைக் கிருஷ்ணகிரியில் அமைத்திட முடிவுசெய்துள்ளது. வரும் 2022-க்குள் ஆண்டுதோறும் ஒரு கோடி வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பேசிய ஓலா தலைமை நிர்வாக அலுவலர் பவிஷ் அகர்வால், "கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா ஃபியூச்சர் பேக்டரி திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். இந்த ஆலையில் 2 விநாடிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் உற்பத்தி ஆகும். 3,000 ஏஐ கொண்ட மிக முன்னேறிய இருசக்கர வாகன தொழிற்சாலையாக இது இருக்கும்.

தொழிற்சாலையின் பிரதான உற்பத்திக்கூடம் மட்டுமே 150 ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இந்தத் தொழிற்சாலைக்காக ரூ.2,400 கோடி முதலீடு செய்யப்படுகிறது. பேட்டரி முதல் அனைத்துவிதமான சாதனங்களையும் உற்பத்தி செய்திடும் வகையில் தொழிற்சாலையில் வசதிகள் இடம்பெறும்.

ஆலையில் பெரும்பாலும் ரோபோட் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தயாரிப்புப் பணியில் மூன்றாயிரம் ரோபோட்கள் பயன்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

electric scooter
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

மேலும், ஓலா நிறுவனம் தனது முதல் எலக்ரிக் ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, டெல்லியில் பேட்டரி இடமாற்றம், சார்ஜிங் நிலையங்களை நிறுவ இந்தியாவின் முன்னணி மின் விநியோக நிறுவனங்களுடன் ஓலா பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

இதையும் படிங்க: 'சுந்தர் பிச்சையின் மகளிர் தின பரிசு' - கிராமப்புற பெண்களுக்காக ரூ.182 கோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.