டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக சைரஸ் மிஸ்திரியை மீண்டும் நியமித்த தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாய ஆணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சைரஸ் மிஸ்திரியை செயல் தலைவராக நியமித்ததை எதிர்த்து நிறுவனங்களின் பதிவாளர் ( Registrar of Companies), தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முகோபாத்தியாய் தலைமையிலான இரண்டு பேர் கொண்ட அமர்வு முன் இம்மனு விசாரணைக்கு வந்தது. மனு விசாரணையின்போது, டிசம்பர் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட தீர்ப்பை திருத்த போதுமான காரணிகள் இல்லை எனக்கூறி தள்ளபடி செய்தது.
முன்னதாக, டாடா- மிஸ்திரி வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் மிஸ்திரியை செயல் தலைவராக மீண்டும் நியமித்தது. மேலும், சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பாயம் குறிப்பிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டாடா சன்ஸ் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. சைரஸ் மிஸ்திரியை டாடா குழுமம் அதன் முதலீட்டு நிறுவமான டாடா சன்ஸ் செயல் தலைவர் பதவியிலிருந்து 2016ஆம் ஆண்டு நீக்கியது. இதையடுத்து டாடா சன்ஸ் செயல் தலைவராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.