ஃபோர்பஸ் இந்தியா இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலான டாப் 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுவருகின்றது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான பணக்காரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் வழக்கம்போல் முதல் இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். மேலும் அந்த இதழில், இந்திய பணக்கார்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் பொதுமுடக்க காலத்திலும் இவர்களது வருவாய் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானியே முதலிடம் வகித்துவருகிறார்.
பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 92.7 பில்லியன் டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.6.95 லட்சம் கோடி) அதிகமாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட இவரது சொத்து மதிப்பில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் கவுதம் அதானி 74.8 பில்லியன் டாலர்களுடன் (கிட்டத்தட்ட ரூ.5.61 லட்சம் கோடி) இருகிறார். அதானியின் நிகர சொத்து மதிப்பில் கடந்தாண்டு மட்டும் ரூ. 3.71 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹெச்.சி.எல். நிறுவனத் தலைவரான சிவ் நாடார் 31 பில்லியன் டாலர்களுடன் (ரூ. 2.33 லட்சம் கோடி ரூபாய்) இருக்கிறார். பட்டியலில் நான்காவது இடத்தில் டி - மார்ட் நிறுவனரான ராதாகிருஷ்ணன் தமானி 29.4 பில்லியன் டாலர்களுடன் (ரூ. 2.21 லட்சம் கோடி) இருக்கிறார்.
இதையும் படிங்க: நெருக்கடி நிலையிலும் உலக பில்லியனர்கள் பட்டியலில் டாப்பில் இருக்கும் முகேஷ் அம்பானி!