டெல்லி: தொலைதொடர்பு நிறுவனங்கள் நிறுவ இருக்கும் தரைவழி சேவைகளுக்கான நெட்வொர்க் சோதனைகளை 6 மாதத்திற்குள்ளாகவே செய்து முடித்திடவேண்டும் என்று ட்ராய் கூறியுள்ளது. இந்த நாட்களில் பயனர்களிடம் இருந்து எந்த விதமான தொகையும் நிறுவனங்கள் வசூலிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தொலைதொடர்பு நிறுவனங்களினால் இதனை குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்து முடிக்க முடியவில்லை என்றால், அதற்கான காரணங்கள் ஆராயப்படும். அதில் முகாந்திரம் இருந்தால் அவர்களுக்கு நீட்டிப்பு வழங்கப்படும் என ட்ராய் கூறியுள்ளது.
ட்ராய் வெளியிட்ட அறிக்கையில், நெட்வொர்க் சோதனைக்கான காலக்கெடுவை நீட்டிக்க தேவையான விதிமுறைகள், உரிமதாரரால் வகுக்கப்படலாம். டிஎஸ்பி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நெட்வொர்க் சோதனைக்கான மொத்த காலம் 180 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ஓராண்டு நிறுத்தம்
மேலும், இதுபோன்ற சோதனை ஓட்டத்தின் போது, பயனாளர்களிடமிருந்து எந்த தொகையும் வசூல் செய்யக்கூடாது என்று ட்ராய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.