ETV Bharat / business

ட்ரிபிள் ரெயின்டிராப் கேமராவுடன் வெளிவரும் எல்ஜி 5ஜி வெல்வெட்! - எல்ஜி நிறுவனம்

எல்ஜி நிறுவனம் புதிதாகத் தயாரித்துள்ள வெல்வெட் செல்போனின் அமைப்பு, வடிவம் வெளியாகவே, அது மக்கள் மத்தியில் ஆர்வத்தைத் துண்டியுள்ளது.

எல்ஜி
எல்ஜி
author img

By

Published : Apr 21, 2020, 5:36 PM IST

தென்கொரிய தொழில் நுட்ப நிறுவனமான எல்ஜி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் வெல்வெட் அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சத்தில் செல்போன் பின்புறத்தில் மூன்று கேமரா வரிசைகளை ரெயின் டிராப் வடிவமைப்பில் அமைத்துள்ளனர்.

சமீபத்தில் வெல்வெட் செல்போனின் முக்கிய அம்சங்கள் குறித்த வீடியோ ஒன்று நிறுவனத்தின் கொரிய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம், எல்ஜி வெல்வெட் செல்போன் வெண்மை, பச்சை உள்ளிட்ட நான்கு நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி வெல்வெட் செல்போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக்கும், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாக, சிம் கார்டு ஸ்லாட்டின் மேல் பகுதியில் அமைந்துள்ளது சுவாரஸ்யமானது. இந்த செல்போனின் விலை குறித்தும், விற்பனை தேதி குறித்தும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: ரியல்மி நர்சோ செல்போன் அறிமுகம் மீண்டும் ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.