ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்கள், தொழில்நுட்பத்தின் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பி, நேரத்தை செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக வேலை தொடர்பான சந்திப்புகளும், நீண்ட நாள்களாக நேரில் சந்திக்க முடியாத நண்பர்களுடனான சந்திப்புகளும் காணொலி அழைப்பில்தான் தற்போது நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி தற்போது மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. இதற்காக கூகுள்மீட், ஜூம், வாட்ஸ்அப் என பல்வேறு செயலிகள் இருந்தாலும், ஒரே நேரத்தில் 100 பேர் வரை கலந்துரையாடும் வசதி ஜூம் காலில் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமீட் எனும் காணொலி அழைப்புகளுக்கான பிரத்யேக செயலியை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூயோமீட் சிறப்பு அம்சங்கள்:
- பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக வீடியோ காலில் பேசும் வசதி மட்டுமின்றி 100 பங்கேற்பாளர்களுடன் மீட்டிங் நடத்தும் வசதியையும் கொண்டுள்ளது.
- பயனர்கள் தொலைப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் ஐடியுடன் பதிவு செய்யலாம்.
- காலவரம்பற்ற மீட்டிங் வசதி.
- ஜியோமீட் நடத்தும் மீட்டிங் அனைத்தும் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்படுகிறது. வெயிட்டிங் ரூம் உள்ள காரணத்தினால் மீட்டிங்கில் அனுமதியின்றி யாரும் நுழைய முடியாது.
- இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர், விண்டோஸ் ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்போது வரை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஜியோமீட் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.