முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய ஜியோபோன் 2021 சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த சலுகையானது, ஒரு புதிய ஜியோபோனையும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு வரம்பற்ற சேவைகளையும் ரூ. 1999 தொகையில் பயனாளர்கள் பெற்றிட முடியும். ‘2 ஜி-முக்த் பாரத்’ இயக்கத்தை விரைவுபடுத்துவதற்காக, ஜியோ நிறுவனம் இந்த மலிவு விலையிலான சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சலுகையை மார்ச் 1ஆம் தேதி முதல் அனைத்து ரிலையன்ஸ் ரீடெயில், ஜியோ ரீடெயில் விற்பனையாளர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிய பயனர்களுக்கான ஜியோபோன் 2021 சலுகை இரண்டு திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ரூ.1,999 க்கு, புதிய பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், வரம்பற்ற தரவு (ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி அதிவேக டேட்டா) கொண்ட ஜியோபோனைப் பெறுகிறார். அதுவே ரூ.1,499 திட்டத்தை தேர்வு செய்தால், 2 ஆண்டுகளுக்கு பதிலாக, நீங்கள் அதை ஒரு வருடத்திற்கு (அதாவது 12 மாதங்கள்) மட்டுமே ஜியோ சலுகைகளை உபயோகிக்க முடியும்.
பீச்சர் போன் உபயோகிப்பவர் 2 ஆண்டு சேவைக்காக, பிற நெட்வொர்க்குகளில் தற்போது ரூ.5,000 வரை செலவழிக்கின்றனர்.அதே நேரத்தில் ஜியோ அதனை ரூ.2000 க்கு வழங்கவுள்ளது. 2 ஆண்டு வாய்ஸ் சேவைகளுக்கு, ஒருவர் குறைந்தபட்சம் ரூ.149 திட்டத்தை 24 ரீசார்ஜ்களாகப் பிரித்து மொத்தம் ரூ.3600 தொகைக்கு ரீசார்ஜ் செய்கின்றனர். மேலும், ஒரு பீச்சர் போனின் விலை குறைந்தபட்சம் ரூ.1200 - ரூ.1500 வரை உள்ளது. ஆகமொத்தம் ரூ.5000 செலவு செய்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 5ஜி சேவைக்காக குவால்காம் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏர்டெல்!