ETV Bharat / business

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவேக மின்சார பைக் - ஐஐடி மாணவர்கள் சாதனை!

சென்னை: இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட ETRYST 350 மின்சார பைக்கின் சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மின்சார பைக்
ETRYST 350
author img

By

Published : Feb 11, 2021, 7:08 PM IST

ஐஐடி ஹைதராபாத்துக்குச் சொந்தமான ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்யூர் இவி, தனது முதல் அதிவேக மின்சாரம் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு, ETRYST 350 என பெயரிட்டுள்ளனர். இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட இந்த பைக், 120 கி.மீ தொலைவிற்கு ஒரே சார்ஜில் பயணிக்கும் வைக்கும் வகையிலும், 3.5 கிலோவாட் காப்புரிமை பெற்ற பேட்டரியும் கொண்டுள்ளது.

ETRYST 350 மின்சார வாகன துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின், 20 ட்ரையல் வாகனங்கள், குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் நாடு முழுவதும் 2021 மார்ச் இறுதிக்குள் சோதனைக்காக வைக்கப்படவுள்ளது. மேலும், வரும் 2021 ஆகஸ்ட் மாதத்தில், பொதுமக்கள் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதே அம்சங்களைக் கொண்ட வாகனங்களின் விலை தான், ETRYST 350க்கும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

First Electric Motorcycle ETRYST 350
ETRYST 350 மின்சார பைக்

ஹைதராபாத்தில் உள்ள பியூர் இவியின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி மையத்தில் ETRYST 350 வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றை சார்ஜில் 120 கிமீ வரை சென்றடையும் தன்மை கொண்டது. இதில், அதிகபட்சமாக 85 கீமி வேகத்தில் செல்ல முடியும்.

இதுகுறித்து பேசிய ஐஐடி ஹைதராபாத் பேராசிரியர் டாக்டர் நிஷாந்த் டோங்காரி, "இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ETRYST 350 வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுமையாக, எங்களது நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட பைக் ஆகும். தற்போது, விரிவான சோதனை நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள போட்டி நிறைந்த உலகில், இந்தப் வாகனம் நிச்சயம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இருக்கும்" என்றார்.

மேலும், PURE EV நிறுவனம் தனது தயாரிப்புகளை நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் மற்ற தெற்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் முயற்சியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வீழ்ச்சியிலிருந்து மீளும் ஆட்டோமொபைல் துறை - உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.