நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை (ஜூலை - செப்டம்பர் வரை) ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தாக்கல் செய்துள்ளது. அதில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,345 கோடியாக இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாயும் 14.9 சதவீதம் உயர்வைக் கண்டு, ரூ.13,515 கோடியாக உள்ளது. நடப்பு, சேமிப்பு கணக்குகள் எண்ணிக்கை 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. சேமிப்பு கணக்குகளில் ரூ.2.64 லட்சம் கோடியும், நடப்பு கணக்குகளில் ரூ.1.36 லட்சம் கோடியும் இருப்பு உள்ளது.
வைப்புத் தொகையை பொறுத்தமட்டில் ரூ.6.20 லட்சம் கோடியாக உள்ளது. இது 28.3 சதவீதம் உயர்வாகும். மொத்த அசையா சொத்துகள் 1.38 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்த வகையில் வரிக்கு செலுத்திய பின்னர் வருவாய் ரூ.5,006 கோடியாக உள்ளது.
இதையும் படிங்க: தொடரும் காளையின் ஆட்டம்! - சென்செக்ஸ் 291 புள்ளிகள் உயர்வு