ETV Bharat / business

ஏர் இந்தியாவை ஏலம் கேட்க காலக்கெடு நீட்டிப்பு - வர்த்தகச் செய்திகள்

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் கேட்க காலக்கெடு வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Air India
Air India
author img

By

Published : Apr 28, 2020, 7:35 PM IST

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை ஏலமெடுக்கும் காலக்கெடுவை மத்திய அரசு தற்போது நீட்டித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை லாபகரமாக இயக்க, தனியார் வசம் ஒப்படைக்கும் முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிறுவனங்கள், ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் கேட்க முன்வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்திற்கு சுமார் 60 ஆயிரத்து 74 கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில், நிறுவனத்தை வாங்கும் நபர் 23 ஆயிரத்து 286 கோடி ரூபாய் கடன் தொகையை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மீதம் உள்ள தொகையை அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிரத்யேக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீனா மீதான வெறுப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - நிதின் கட்கரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.