இந்தியாவின் பழம்பெரும் வர்த்தக நிறுவனமாக திகழ்ந்துவரும் கோத்ரேஜ் நிறுவனத்தின் சொத்துக்களும், வர்த்தகங்களும் பிரிக்கப்படுகிறன.
கோத்ரேஜ் குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து மூத்த சகோதரர் ஆதி கோத்ரேஜ் பதவி விலகிய நிலையில் இளைய சகோதரர் நாதீர் கோத்ரேஜ் தலைவர் பதவியை ஏற்றார். ஆதி கோத்ரேஜின் மூன்று பிள்ளைகளும், நாதீர் கோத்ரேஜின் இரண்டு பிள்ளைகளும் கோத்ரேஜ் குழுமத்தின் நிறுவனத்தின் முக்கியப் பதவிகளில் உள்ளனர்.
மும்பை பங்குச்சந்தையில் இக்குடும்பத்திற்கு கோத்ரேஜ் கன்ஸ்யூமர், கோத்ரேஜ் ப்ராப்பர்ட்டீஸ், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ், கோத்ரேஜ் அக்ரோவெட், ஏஸ்டெக் லைப்சையின்ஸ் ஆகிய ஐந்து நிறுவனங்கள் உள்ளன. இதோடு பட்டியலிடப்படாத கோத்ரேஜ் & பாய்ஸ் ஆகிய நிறுவனமும் உள்ளது.
இதில், பங்குச்சந்தையில் இருக்கும் கோத்ரிஜ் குழும நிறுவனங்களை ஆதி கோத்ரேஜ், நாதீர் கோத்ரேஜ் சகோதரர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். சந்தையில் பட்டியலிடப்படாத கோத்ரேஜ் & பாய்ஸ் நிறுவனத்தை ஜம்ஷித் கோத்ரேஜ் நிர்வாகம் செய்து வருகிறார்கள். மேலும், இந்த ஐந்து நிறுவனத்திலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1897ஆம் ஆண்டில் பூட்டு தயாரிப்பில் தொடங்கிய கோத்ரேஜ் குழுமம் தற்போது ஏரோஸ்பேஸ், விவசாயம், நுகர்வோர் பொருட்கள், வீட்டு உபகரணங்கள், கெமிக்கல்ஸ், கட்டுமானம், மின்னணு சாதனங்கள், பர்னிச்சர், ரியல் எஸ்டேட், செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ், இன்போடெக் எனப் பல துறையில் பரந்து இயங்கிவருகிறது.
இன்றைய சந்தை மதிப்பீட்டின் படி மொத்த 4.1 பில்லியன் டாலர் மத்தியிலான கோத்ரேஜ் குழுமம் தற்போது இரண்டாக உடையவுள்ளது. இதில் ஒரு நிறுவனத்தை ஆதி கோத்ரேஜ், நாதீர் கோத்ரேஜ் சகோதரர்கள் ஆகியோரும், மற்றொரு நிறுவனத்தை ஜம்ஷித் கோத்ரேஜ், ஸ்மிதா கிரிஸ்னா கோத்ரேஜ் சகோதரர்களும் நிர்வாகம் செய்யவுள்ளனர்.
இதையும் படிங்க: விரைவில் சிறிய ரக மின்சார கனரக வாகனங்களை களமிறக்கும் டாடா