பாரிஸ் (பிரான்ஸ்): பெரும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ரெனால்ட் நிறுவனத்தின் செலவினங்களை குறைக்கும் வகையில், உலகளவில் 15,000 ஊழியர்களை வேலையை விட்டு வெளியேற்றுகிறது இந்நிறுவனம்.
ரெனால்ட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனால்ட் ஊழியர்கள் 4600 பேரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதனை தவிர்த்து உலகளவில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
கரோனா தாக்கத்தின் காரணமாக வாகன உற்பத்தி, விற்பனை ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
270 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் புக் மை ஷோ
உலகளவில் 40 லட்ச வாகனங்கள் தயாரிக்கப்படும் என்ற கணக்கீட்டை குறைத்து 2024ஆம் ஆண்டு காலகட்டம் வரை 33 லட்ச வாகனங்கள் என்ற கணக்கீட்டை நிறுவனம் அளவீடாக கொண்டுள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தில் உலகம் முழுவதிலும் மொத்தம் ஒரு லட்சத்து 80ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.