இணையவழி பொருள் வணிக ஜாம்பவான்களான அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் தற்போது கரோனா நோய்க் கிருமியின் தாக்கத்தினால் தங்களின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட இச்சேவையை மீண்டும் செயல்பாட்டில் கொண்டுவர மத்திய அரசை நாடியுள்ளன இந்நிறுவனங்கள்.
சில தினங்களுக்கு முன், உணவுப் பொருளை பதிவுசெய்தவருக்கு கொடுப்பதற்காகச் சென்ற நபரை, காவல் துறையினர் சரமரியாகத் தாக்கியுள்ளனர். இதன்மூலம் உணவுப் பொருள்களை டெலிவரி செய்பவரின் பாதுகாப்புக் கேள்விகுறியாகும் நிலை இருப்பதாக இந்நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.
கோவிட் - 19: பரபரப்பான சூழலில் ஜி-20 நாடுகள் இன்று ஆலோசனை
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நிறுவனங்கள், மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தால், தங்குதடையின்றி மக்களுக்கான அத்தியாவசிய பொருள்களைக் கொண்டுசேர்க்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்; காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.