பயனாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் என மூன்று ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன. ரெட்மி நோட் 10 ப்ரோ, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டும் டார்க் நைட், கிளேஸியர் ப்ளூ, விண்டேஜ் ப்ரான்ஸ் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இதுகுறித்த முழு பார்வை இதோ...

ரெட்மி நோட் 10 சிறப்பு அம்சங்கள்:
- 6.43 இன்ச் அளவிலான புல் எச்டி சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆண்ட்ராய்டு 11
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 678 SoC பிராசஸர்
- 6ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- 48 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 582 சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என நான்கு பின்புற கேமராக்கள்
- 3 மெகாபிக்சல் செல்பி கேமரா
- 5000mah பேட்டரி
- 33W ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரங்கள்
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 11,999
- 6ஜிபி ரேம்,128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 13,999
விற்பனை தேதி: மார்ச் 16

ரெட்மி நோட் 10 ப்ரோ சிறப்பு அம்சங்கள்:
- 6.67 இன்ச் அளவிலான புல் எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி SoC பிராசஸர்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- 64 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் ஐசோசெல் ஜி.டபிள்யூ 3 சென்சார் + 5 மெகாபிக்சல் சூப்பர் மேக்ரோ ஷூட்டர் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்- ஆங்கிள் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என நான்கு பின்புற கேமராக்கள்
- 16 மெகாபிக்சல் செல்பி கேமரா
- 33W ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரங்கள்
- 6ஜிபி ரேம்,64 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 15,999
- 6ஜிபி ரேம்,128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 16,999
- 8ஜிபி ரேம்,128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 18,999
விற்பனை தேதி: மார்ச் 17

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்:
- 6.67 இன்ச் அளவிலான புல் எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி SoC பிராசஸர்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- 108 மெகாபிக்சல் முதன்மை சாம்சங் எச்எம் 2 கேமரா சென்சார்+ 5 மெகாபிக்சல் சூப்பர் மேக்ரோ ஷூட்டர் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்- ஆங்கிள் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என நான்கு பின்புற கேமராக்கள்
- 16 மெகாபிக்சல் செல்பி கேமரா
- 5020mah பேட்டரி
- 33W ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரங்கள்:
- 6ஜிபி ரேம்,64 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 18,999
- 6ஜிபி ரேம்,128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 19,999
- 8ஜிபி ரேம்,128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ. 21,999
விற்பனை தேதி: மார்ச் 18

இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ், ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனைக்கு வருகிறது.முன்னதாக ரெட்மி நோட் 9 சீரிஸூக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், புதிய நோட் 10 சீரிஸ்களை மக்கள் வாங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குறைந்த விலையில் கலக்கல் அம்சங்கள்: ஜியோனியின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்!