ETV Bharat / business

வாட்ஸ்அப்பில் புதிய என்ட்ரி 'டார்க் மோட்'! - வாட்ஸ்அப்

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் 400 மில்லியன் பயனாளர்களுக்கு டார்க் மோட் (DARK MODE) வசதி கிடைத்துள்ளது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்
author img

By

Published : Mar 9, 2020, 3:59 PM IST

உலகில் வாட்ஸ்அப் உபயோகிக்கும் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர். தற்போது அருகிலிருக்கும் மனிதர்களுக்கு கூட வாட்ஸ்அப் மெசஜ் தான் செய்கிறோம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய வசதிகளை வெளியிட்டுவரும் வாட்ஸ்அப் நிறுவனம், தனது புதிய முயற்சியாக டார்க் மோட் (DARK MODE) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது அனைத்து புதிய வசதிகளையும் பிட்டா வெர்ஷன் மக்களுக்குத் தான் முதலில் அளிக்கப்பட்டு சோதனை செய்வார்கள். அதில் எந்தக் குறைபாடும், பிரச்னையும் இல்லை என்று தெரிந்த பிறகு தான், அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும்.

பயனாளர்கள் வாட்ஸ்அப்பில் டார்க் மோட் ஆன் செய்தால், டார்க் கிரே மற்றும் வெள்ளை நிறத்தில் திரை மாறிவிடும். இதனால், டிஸ்பிளே கலர் குறைந்து, வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் படிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் கூறுகையில்," நாங்கள் இந்த மோட் தயாரிக்கும் போது இரண்டு விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். அதாவது, வாசிப்புத்திறன் மற்றும் தகவல் வரிசைமுறை (Readability and information hierarchy). நிறங்களை தேர்ந்தெடுக்கும்போது, ​​கண் சோர்வைக் குறைக்கும் வகையிலும், ஐபோன்-ஆண்ட்ராய்டு செல்போனின் ஒர்ஜினல் நிறத்திற்கு ஏற்றவகையில் தயாரிக்க விரும்பினோம்" என்றார்.

தற்போது, இந்தியாவில் வாட்ஸ்அப் உபயோகிக்கும் 400 மில்லியன் பயனாளர்களுக்கும் டார்க் மோட் வசதி கிடைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வசதியைப் பெறுவதற்கு பயனாளர் தங்களது வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: மெட்ராஸ் ஐஐடியை தேடிவந்த ரோல்ஸ் ராய்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.