போஸ் நிறுவனம் ஆடியோ சாதனங்கள் துறையில் தனக்கென்று தனி அடையாளத்தைப் பதித்துள்ளது. போஸ் நிறுவன சாதனங்கள் விலை அதிகம் என்றாலும் மக்களைப் பொறுத்தவரை அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் தரமாகவும், நீடித்து உழைக்கும் தன்மை உடையது என்பதாலும் அதை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் போஸ் நிறுவனம், தனது புதிய படைப்பான நாய்ஸ் கேன்சலேஷன் ஹெட்போனை ரூ. 34,500க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
மிகவும் உயர்தரமான நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும், ஹெட்போனில் உள்ள பட்டன் மூலமாக சுற்றப்புர ஆடியோவை ஹெட்போனை கழற்றாமல் கேட்டுக் கொள்ளமுடியும், இதில் அமைந்துள்ள உயர்தரமான தொழில்நுட்பத்தால் மிகவும் துல்லியமான ஆடியோவையும் கேட்க முடியும் போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்பு வெளியான கோயட் கம்பட் 2 சீரிஸின் வெற்றி காரணமாக மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இந்த நாய்ஸ் கேன்சலேஷன் ஹெட்போனை வெளியிட்டுள்ளனர்.