ஆப்பிள் நிறுவனம் செல்போன் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்துவருகிறது. அந்நிறுவனம் பயனாளர்களைக் கவரும் வகையில் புதிய செல்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் பயனாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் எஸ்.இ., 6, 6 பிளஸ், 6 எஸ்.பிளஸ் ஆகிய நான்கு ஐபோன் மாடல்களின் விற்பனையை நிறுத்தியுள்ளது.
பிரிமியம் போன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளதால் குறைந்த விலை செல்போன்களின் விற்பனையை நிறுத்தியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் எந்தவொரு முன்னறிவிப்பின்றி செல்போன் விற்பனையை நிறுத்தியுள்ளதால் பயனாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவிவருகிறது.