நிதி நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் துரிதமான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நிர்வாகக்குழுவில் இருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வெளியேறினர். இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகக்குழுவுடன் விமான இயக்குனரகத் தலைவர் மற்றும் செயலாளர் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது சுமார் 1,500 கோடி ரூபாய் அவசரக்கால நிதியுதவியாக நிதியமைச்சகம் வழிகாட்டுதல் ஸ்டேட் வங்கி மற்றும் கிளை வங்கிகள் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நிதிச்சுமைக் காரணமாக இயக்கப்படாமல் உள்ள 75க்கும் மேற்பட்ட விமானங்கள் மீண்டும் பழைய நிலையில் இயக்கப்படவுள்ளது. அத்துடன் ஊழியர்களுக்கான சம்பளம், நிறுவனத்தின் வாடகை பாக்கி, எரிபொருள் தேவை போன்ற அம்சங்கள் இந்த அவசரகால நிதியுதவியைக்கொண்டு தீர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே வரும் ஏப்ரல் இறுதிக்குள் 80 சதவிகித ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மீண்டும் பழைய நிலைமையில் இயக்கப்படும் என விமான இயக்குனரகச் செயலாளர் பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார். நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையால் நிறுவனத்தின் எதிர்காலம் நம்பிக்கைக்குரிய அம்சத்தில் உள்ளதாக ஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரி வினய் தூபே கூறியுள்ளார்.