டெல்லி: பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, பொது பங்கு வெளியீட்டில் களம் கண்டது.
இதன்மூலம் 9,375 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க நிறுவனம் திட்டமிட்டது. மொத்தமாக 71 கோடியே 92 லட்சத்து 33 ஆயிரத்து 522 பங்குகளை விற்க முடிவு செய்திருந்த நிலையில், முதல் நாளிலேயே 75 கோடியே 64 லட்சத்து 33 ஆயிரத்து 80 பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் போட்டிப் போட்டு கொண்டு விண்ணப்பித்தனர்.
இதனால் பங்கு சந்தையில் சொமேட்டோ பங்கு பட்டியலிடப்பட்ட போது, சந்தை மதிப்பை விட பங்கின் விலை உயர்வுடன் இருந்தது. இதற்கான காரணங்களை சொமேட்டோ நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில், "ஜூன் மாத காலாண்டில் 356 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்ததாக அறிக்கை வெளியிட்டிருக்கும் சொமேட்டோ நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் 100 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்திருந்தது.
அதே நேரத்தில் சொமேட்டோ பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், நிறுவனத்திற்கு அதிக செலவினம், நிறுவன ஊழியர் பங்குகள் மீதுள்ள பணமற்ற செலவினம் என சொமேட்டோ இழப்பைச் சந்தித்தது.
என்னதான் கரோனா காலகட்டத்தில் செலவினங்கள் அதிகரித்து வந்தாலும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், நிறுவன வருவாய் 16 விழுக்காடு அளவு உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் மட்டும் உணவு விநியோகத்திற்கான பில்லியன் பதிவுகளை நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணங்களால் மட்டுமே பெரும் செல்வாக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் சொமேட்டோ நிறுவன பங்குகளுக்கு கிடைத்தது. அதுவே நிறுவனத்தின் மீது முதலீடு செய்வதற்கும் தூண்டுதலாக இருந்தது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.